📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 05, 2026 02:00 PM

Bigg Boss Tamil Season 10 House : சீசன் 10

Bigg Boss Tamil Season 10 House : சீசன் 10

Bigg Boss Tamil Season 10 House : சீசன் 10-க்காக டோட்டலாக மாறிய பிக் பாஸ் வீடு? அதில் இம்புட்டு வசதிகளா?

Bigg Boss Home Tour : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ள நிலையில், அந்நிகழ்ச்சிக்கான வீடு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாடு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் சீசன் 10, செப்டம்பர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே, பிக் பாஸ் வீடு எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கும் முன்பே பிக் பாஸ் சீசன் 10 வீட்டின் புகைப்படங்களும் அங்குள்ள அம்சங்கள் என்னென்ன போன்றவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Title Winners : 10வது சீசன் ஸ்டார்ட் ஆகப்போகுது... இதுவரை 9 சீசன்களில் பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கியது யார்... யார்?

10 ஜன்னல்கள்... சீசன் 10-க்கான ஸ்பெஷல் டச்!

வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் படுவது பசுமையான வெளிப்புறப் பகுதி. அங்கு நான்கு பகுதிகளில் குஷன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிப்புறச் சுவரில் இடம்பெற்றுள்ள 10 ஜன்னல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. இது 10வது சீசன் என்பதை நினைவுபடுத்தும் வகையில் வீட்டின் பல்வேறு பகுதிகளில் 10 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளது.

ஸ்டார் ஹோட்டல் போல் பிரம்மாண்ட ஹால்!

வீட்டுக்குள் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஹால் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் விதவிதமான கலை வேலைப்பாடுகளும், இயற்கையை பிரதிபலிக்கும் செடி, மரங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், சுவரில் வயதான மனிதர் ஒருவரின் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இவர் யார் என்ற கேள்விக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படையான ‘காமன் மேன்’ கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாலின் நடுப்பகுதியில் பெரிய டைனிங் டேபிள் மற்றும் ஏராளமான இருக்கைகள் உள்ளன. பீங்கான் தட்டுகள், கோப்பைகள் என டைனிங் பகுதியும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் போட்டியாளர்களின் சாப்பாட்டு நேர உரையாடல்கள் மட்டுமின்றி, அவ்வப்போது சூடான விவாதங்களும் அரங்கேறப் போகின்றன.

நவீன சமையலறை... முழுமையாக தயார்!

ஹாலின் ஒரு பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சமையலறையின் பின்னணியில் நிகழ்ச்சிக்கு பங்களிக்கும் நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், ஹாலின் மேற்பகுதியில் பிரம்மாண்டமான விளக்கு அலங்காரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு இது கூடுதல் அழகை சேர்க்கிறது.

யாருக்கும் தெரியாத அந்த அறை... இதுதான் Confession Room!

வீட்டின் ஒரு பகுதியில் இருக்கும் கதவு பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. அது தான் Confession Room. போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இருப்பதை பிக் பாஸிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த அறையில் மைக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கேமராக்களுக்கு முன்பாக போட்டியாளர்கள் தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான இடமாக இது இருக்கிறது.

10 படுக்கைகள்... தனி கேப்டன் அறையும் இருக்கு!

அடுத்ததாக பிரம்மாண்டமான படுக்கையறை அமைந்துள்ளது. சீசன் 10-ஐ குறிக்கும் வகையில் மொத்தம் 10 படுக்கைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. படுக்கையறைக்கு அருகில் தனியாக ஒரு சிறிய அறையும் உள்ளது. அது கேப்டனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறை. வீட்டின் மற்றொரு பகுதியில் ஸ்டோர் ரூமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறையை மட்டும் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

பிக் பாஸ் வீட்டை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் பஸ்!

வீட்டின் அருகே பிரம்மாண்டமான பிக் பாஸ் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. ரசிகர்கள் அனைவராலும் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியாது என்பதால், அந்த அனுபவத்தை பொதுமக்களுக்கும் வழங்கும் நோக்கில் இந்த பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பஸ்ஸுக்குள் முந்தைய பிக் பாஸ் சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் நிகழ்ச்சியில் செய்த சுவாரஸ்யமான விஷயங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியா, தர்ஷன் உள்ளிட்ட முன்னாள் போட்டியாளர்களின் நினைவுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ரசிகர்களுக்கும் Confession Room!

இந்த பஸ்ஸில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக Confession Room அமைக்கப்பட்டுள்ளது. பஸ் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள ரசிகர்கள் இந்த அறைக்குள் சென்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும், அவர்கள் கூறும் கருத்துகளுக்கு பிக் பாஸின் குரலில் நேரடியாக பதில் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உணர வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முயற்சி கவனம் ஈர்க்கிறது.