📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 24, 2026 03:02 PM

Box Office: கடந்த வாரம் வெளியான படங்களில் கல்லா கட்டியது யாரு?.. டோட்டல் டிசாஸ்டர் ஆனது எந்த படம்?

Box Office: கடந்த வாரம் வெளியான படங்களில் கல்லா கட்டியது யாரு?.. டோட்டல் டிசாஸ்டர் ஆனது எந்த படம்?

சென்னை: கடந்த வாரத்துக்கும் முந்தைய வாரம் வெளியான படங்களில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 200 கோடி வசூலை ஈட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் போஸ்டர் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகி விட்டது. விஷாலின் மகுடம் திரைப்படம் அதிகபட்சமாகவே 3 முதல் 4 கோடி தான் வசூல் செய்து டோட்டல் டிசாஸ்டர் ஆனது.

இந்நிலையில், கடந்த வாரம் தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியான நிலையில், அந்த படங்கள் எந்தளவுக்கு வசூலில் தப்பித்தது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

மமிதா பைஜு நடித்த மலையாள படமான பெத்லஹம் யூனிட், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த இருமுடி படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில், அதன் வசூல் குறித்த தகவல்களையும் இங்கே காணலாம்.

மொத ராத்திரி வசூல்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளியான மொத ராத்திரி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையிலும், முதல் நாளில் வெறும் 14 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. ஆனால், மக்கள் படத்தை பாராட்டிய நிலையில், 2வது நாளில் 24 லட்சமும் 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை 33 லட்சம் வசூல் என அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் 71 லட்சம் கிராஸ் வசூல் செய்துள்ளது என சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. மைத்ரி தயாரிப்பில் வெளியான குட் பேட் அக்லி 200 கோடி வசூலும், டியூட் 100 கோடி வசூலையும் ஈட்டிய நிலையில், முதல் வார முடிவில் 1 கோடி வசூலை கூட மொத ராத்திரி ஈட்டவில்லை.

ராம் அண்ட் லீலா வசூல்: ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில் ஏலியன் காதல் படமாக உருவான ராம் அண்ட் லீலா திரைப்படம் முதல் நாளில் 20 லட்சம் ரூபாயும், 2வது நாளில் 31 லட்சம் ரூபாயும் 3வது நாளில் 41 லட்சம் என அதிகரித்து ஒட்டுமொத்தமாக 92 லட்சம் ரூபாய் நெட் வசூலை 3 நாட்களில் ஈட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரியோ ராஜ் நடித்த இந்த படத்தின் பட்ஜெட் 6 கோடி ரூபாயாக உள்ள நிலையில், முதல் வார வசூல் ரொம்பவே கம்மியாக வந்துள்ளது.

பெத்லஹம் குடும்ப யூனிட்: பிரேமலு பட இயக்குநர் கிரிஸ் ஏடி இயக்கத்தில் பிரேமம் பட ஹீரோ நிவின் பாலி, பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு நடித்த பெத்லஹம் குடும்ப யூனிட் திரைப்படம் இந்தியளவில் முதல் வார முடிவில் 20.85 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது.

பிளாக்பஸ்டர் இருமுடி: கடந்த வாரம் வெளியான படங்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான இருமுடி திரைப்படம் தான். இந்தியளவில் முதல் 3 நாட்களில் 50 கோடி நெட் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இருமுடி திரைப்படம் எளிதாக 100 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.