சாலை விபத்தில் 79 வயது பாதசாரி மரணம், 46 வயது ஆடவர் கைது, சிங்கப்பூர் செய்திகள்
ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் இம்மாதம் 11ஆம் தேதி நேர்ந்த சாலை விபத்தில் 79 வயது பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் மாண்டார். அவரைக் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படுகிறது.
கிரேஞ்ச் ரோட்டிற்கும் பெட்டர்சன் ரோட்டிற்கும் இடைப்பட்ட சந்திப்பில் காலை 6.45 மணியளவில் நேர்ந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சுயநினைவை இழந்த நிலையில் கொண்டுசெல்லப்பட்ட பாதசாரி, பின்னர் மாண்டார்.
மரணத்தை விளைவிக்கும் அளவுக்குக் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதாக 46 வயது ஆடவர் கைதானார்.
விபத்து குறித்த புகைப்படங்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டன.
விசாரணை தொடர்கிறது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 5.8 விழுக்காடு அதிகரித்தது.
2025ஆம் ஆண்டு விபத்துகளால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 147. அதற்கு முந்தைய ஆண்டு அது 139ஆக இருந்தது.