📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 07:00 PM

சாலை விரிவாக்கம்: விரைவில் விரிவான திட்ட அறிக்கை: தமிழக அரசு

சாலை விரிவாக்கம்: விரைவில் விரிவான திட்ட அறிக்கை: தமிழக அரசு

சென்னை: தமிழ் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் சாலை விரிவாக்கம் குறித்து விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வெளியிடப்படும் என்று பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர்.

அப்போது சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து சட்டப் பேரவை உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் மேலும் பல உறுப்பினர்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அவரின் கேள்விக்கு திரு ஆதவ் பதிலளித்தார். இதற்குப் பதிலளித்த பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்துத் துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, முதலில் செய்ய வேண்டிய பணிகளாக ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பல ரயில்வே இணைப்புப் பகுதிகளில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்திலும் இந்தப் பிரச்சினை உள்ளது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் பல இடங்களில் இருவழி, ஒரு வழிச்சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலையுடன் ஊரகச் சாலைகள் இணையும் இடத்தில்தான் அதிக விபத்துகள் நேரிடுகின்றன என்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளவிருக்கும் சாலைப் பணிகள் குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கியப் பாதையான சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலை காரிடார் சுமார் 700 கி.மீ தூரத்திற்கு 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாகச் செல்லும் இந்த மெகா திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.