📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 10:01 AM

சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை.. கார்த்திக் எடுத்த அதிரடி முடிவு.. கார்த்திகை தீபம்!

சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை.. கார்த்திக் எடுத்த அதிரடி முடிவு.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் மகேஷ், மாயா இருவர் மீதும் சந்தேகம் அடையும் கார்த்திக் அதை எப்படியாவது கண்டுபிடித்து ஆக வேண்டும் என திட்டம் போடுகிறார். இதையடுத்து, ஸ்வாதியின் நிச்சயத்திற்கு வருமாறு அழைக்கிறார். இதையடுத்து, கார்த்திக் வீட்டுக்கு வர, அவனை பார்த்ததும் மகேஷ் மாயா ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இந்த விஷயத்தை பார்த்த மயில்வாகனம் ரூமுக்குள் பாம்பு இருப்பதாக சொல்லி ஒரு கயிரை தூக்கி வீச இருவரும் பயந்து போய் ரூமை விட்டு வெளியே ஓடி வருகின்றனர்.

அவர்களிடம் கார்த்தியிடம் சிக்கிக் கொள்ள கார்த்திக்கு இவர்களை நிற்க வைத்து ஆங்கிலத்தில் நான் கேள்விகளை கேட்க இருவரும் பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இருப்பினும் கார்த்திக் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் சரி ஓகே என்று இவர்களிடம் அறிமுகமாகி கொண்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை சிக்க வைப்பதற்காக ஒரு திட்டத்தை போடுகிறான். அதாவது, ஒரு ரேஷன் கடைக்காரனை சந்தித்து சாமுண்டீஸ்வரி வரி வீட்டில் ரேஷன் அரிசியை வைத்து சாமுண்டீஸ்வரி ரேஷன் அரிசியை கடத்துவதாக பொய் புகார் ஒன்றை கிளப்பி விட சொல்கிறார். அவர் சொன்னது போலவே அரிசியை யாருக்கும் தெரியாமல் அனைத்து ரேஷன் அரிசி மூட்டையும் சாமுண்டீஸ்வரியில் வீட்டில் வைக்கப்படுகிறது. இதனால் ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சாமுண்டீஸ்வரி வீட்டில் சோதனையிட்டு அவரை கைது செய்ய முடிவெடுக்கின்றனர்.

கைதாகப்போகும் சாமுண்டீஸ்வரி: இந்த சமயத்தில் அங்கு வந்த கார்த்தி, இதில் ஏதோ சதி இருக்கிறது. உண்மையை கண்டுபிடிக்க 1/2 மணி நேரம் கால அவகாசம் கேட்டு ரேஷன் கடைக்காரனை அடித்து விசாரிக்கிறார். ரேஷன் கடைக்காரன் சந்தித்து பொருட்களை கடத்த சொன்னது யார்? ரேஷன் பொருட்கள் சாமுண்டீஸ்வரி வீட்டில் வந்தது எப்படி என விசாரணை நடத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.