📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 08:03 AM

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவமனை பணியாளர்கள் கைது

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவமனை பணியாளர்கள் கைது

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற மருத்துவப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். | படங்கள் : எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்​னை​யில் பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளுக்​காக போராட்​டத்​தில் ஈடு​பட்ட பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள் மற்​றும் ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பல்​வேறு பிரிவு​களில் பணி​யாற்​றும் 3,400-க்​கும் மேற்​பட்ட பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி தொடர்ந்து பல்​வேறு போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பணிநிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நேற்று சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே உண்​ணா​விரத போராட்​டத்​தில் ஈடுபட முயன்​றனர்.

பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர் மேம்​பாட்டு சங்​கத்​தின் சார்​பில், உரிமை இயக்​கத்​தின் மாநில தலை​வர் கு.​பாரதி தலை​மை​யில் நடந்த போராட்​டத்​தில் மாநில முழு​வதும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.

போராட்​டத்​துக்கு அனு​மதி இல்​லாத​தால், போராட்​டத்​தில் பங்​கேற்க வந்​தவர்​களை போலீ​சார் கைது செய்ய தொடங்​கினர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம், தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, பணி​யாளர்​கள் சாலை​யில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அனைத்து பணி​யாளர்​களை​யும் போலீ​சார் குண்​டு​கட்​டாக தூக்கி கைது செய்து வாக​னங்​களில் ஏற்றி சென்று சமூக நலக்​கூடங்​களில் அடைத்​தனர்.

இதனால், அந்த பகு​தி​யில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. முன்​ன​தாக, சில பெண் பணி​யாளர்​கள் மயக்​கமடைந்​த​தால், அவர்​கள் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதுதொடர்​பாக பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர் மேம்​பாட்டு சங்​கத்​தின் மாநில தலை​வர் கே.தமிழ்ச்​செல்​வன் கூறுகை​யில், “உண்​ணா​விரத போராட்​டம் நடத்​திய எங்​களை போலீ​சார் கைது செய்​துள்​ளனர். எங்​களுக்கு போராட்​டம் நடத்த உரிமை இல்​லை​யா? கழிப்​பறைக்கு சென்ற பெண் பணி​யாளர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

போராட்​டத்​தில் பங்​கேற்க பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வந்து கொண்​டிருந்​தவர்​களை வழி​யிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்​துள்​ளனர். பல இடங்​களில் பணி​யாளர்​கள் வீட்டு காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர், செயலர் எங்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்தி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை அவகாசம் கேட்​டுள்​ளார். அப்​போது கோரிக்​கைகள் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்​து​வ​தாக தெரி​வித்​துள்​ளனர்” என்​றார்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் உள்​ளிட்​டோர், பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் கைது செய்​யப்​பட்​டதற்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். மேலும், அவர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும்​ என்​று வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.