📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 23, 2026 02:03 PM

சச்சின் பெருசா.. கோலி பெருசா? SENA ஆதாரத்துடன் உண்மையை உடைத்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

சச்சின் பெருசா.. கோலி பெருசா? SENA ஆதாரத்துடன் உண்மையை உடைத்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

சச்சின் பெருசா.. கோலி பெருசா? SENA ஆதாரத்துடன் உண்மையை உடைத்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதம் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய செனா (SENA) நாடுகளில் இவர்களின் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் வீடியோவில் விரிவான புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

செனா நாடுகளில் ஒட்டுமொத்தமாக சச்சின் 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்களுடன் 51.30 சராசரியில் 5,387 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் விராட் கோலி 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 41.54 சராசரியில் 3,781 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருவருக்குமான சராசரியில் பெரிய வித்தியாசம் உள்ளதாக ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டுமே சச்சினை விட விராட் கோலி சிறந்த சராசரியைக் கொண்டுள்ளார். அங்கு சச்சின் 15 போட்டிகளில் 46.44 சராசரியுடன் 1,161 ரன்களும், கோலி 9 போட்டிகளில் 49.50 சராசரியுடன் இரண்டு சதங்கள் உட்பட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சச்சின் தனது விளையாடிய காலத்தில் எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க பந்துவீச்சு தற்போதைய பந்துவீச்சை விட மிகவும் ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் சச்சின் 17 போட்டிகளில் 54.31 சராசரியுடன் 1,575 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் கோலி அதே 17 போட்டிகளில் 33.21 சராசரியுடன் 1,096 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இங்கிலாந்தில் சச்சினின் சராசரியை விட கோலி 20 ரன்களுக்கும் குறைவாகவே வைத்துள்ளார். ஒரு மோசமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் கோலியின் சராசரியை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் சச்சினுடன் ஒப்பிடும் போது கோலி இங்கிலாந்தில் பின்தங்கியுள்ளார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சச்சின் 20 போட்டிகளில் 53.20 சராசரியுடன் 1,809 ரன்களும், கோலி 18 போட்டிகளில் 46.72 சராசரியுடன் 1,542 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கோலி 7 சதங்கள் அடித்து சச்சினை விட ஒரு சதம் அதிகமாக எடுத்திருந்தாலும், சராசரியின் அடிப்படையில் சச்சின் தான் முன்னிலையில் உள்ளார். சச்சினின் சராசரி 53 ஆகவும், கோலியின் சராசரி 46 ஆகவும் உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மூலம் வெளிநாடுகளில் சச்சினின் ஆதிக்கமே அதிகமாக இருந்துள்ளது என்பதை ஆகாஷ் சோப்ரா சுட்டிக் காட்டி இருக்கிறார்.