📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 05, 2026 03:01 PM

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 11 லட்சம் நிதி பெறுவதற்கான எளிய கணக்கீடு

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 11 லட்சம் நிதி பெறுவதற்கான எளிய கணக்கீடு

மத்திய அரசு பெண் பிள்ளைகளுக்காக கொண்டுவந்த திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் இதில் சேமிக்க துவங்கினால் அவர்களுக்கு சிறப்பான ஒரு எதிர்காலத்தை பெற்றோர்களால் உருவாக்க முடியும். அதன் காரணமாக தான் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் முடிந்த வரை முதலீடு செய்யலாம். உங்களுடைய பெண் குழந்தை பிறந்த நாள் முதல் 10 வயது வரை நீங்கள் செல்வமகள் சேமிப்பு கணக்கை துவங்கி அவர்களின் உயர்கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றிற்காக நிதி சேமிக்கலாம்இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் இதற்கு 100 % முழு பாதுகாப்பு உள்ளது. மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2% ஆண்டு வட்டி வழங்கப்படுகின்றது. இந்த கணக்கு துவங்கி 15 ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்தால் போதும் மீதமுள்ள ஆறு ஆண்டுகளுக்கு பணம் செலுத்த தேவையில்லை. ஆனால் அந்த ஆறு ஆண்டுகள் உங்களுடைய பணத்திற்கு வட்டி கிடைக்கும்11 லட்சம் நிதிக்கான கணக்கீடுஉங்களுடைய மக்களின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 11 லட்சம் நிதி சேர்க்க விரும்பினால் அதற்கான எளிய கணக்கீடு இதோமாதாந்திர சேமிப்பு -2000 ரூபாய்ஆண்டு முதலீடு -2,000 × 12 = 24,000முதலீட்டு காலம் -15 ஆண்டுகள்மொத்த அசல் தொகை -24,000 × 15 = 3,60,000வட்டி -முதிர்வு தொகைதற்போதைய வட்டி விகிதம் -8.2% (ஆண்டு கூட்டு வட்டி)15 ஆண்டுகள் செலுத்திய அசல் தொகை -3,60,000 ரூபாய்21 ஆண்டுகளுக்கு கிடைக்கும் வட்டி தொகை -7,98,000மொத்த முதிர்வு தொகை -11.58 லட்சம் ரூபாய்மாதம் 2000 ரூபாய் சேமித்து வந்தால் போதும் நம் பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கில் நிதி திரட்ட முடியும். மாதம் 2000 ரூபாய் என நம்மால் முடிந்தளவுக்கு சேமித்து வந்தால் 21 ஆண்டுகளில் நமக்கு கிட்டத்தட்ட 12 லட்சம் வரை பணம் கிடைக்கும். அதன் மூலம் நம் பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமண தேவைகளை பூர்த்தி செய்யலாம்