📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 25, 2026 06:00 AM

சென்னைக்கு புதிய விமான நிலையம் தேவை: சி.ஐ.ஐ.,

சென்னைக்கு புதிய விமான நிலையம் தேவை: சி.ஐ.ஐ.,

சென்னை: சென்னையில் பொருத்தமான இடத்தில் கூடுதல் விமான நிலையம் அமைக்க தமிழக அரசை சி.ஐ.ஐ, கேட்டுக்கொண்டுள்ளது.

அதன் தென்னிந்திய பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் கூறுகையில், “இந்தியா பல்வேறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

''எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தை மேலும் விரிவாக்க வேண்டும். தவிர, மற்றொரு விமான நிலையமும் அவசியம். விமான நிலையம் அமைக்க நான்கு இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பரந்துாரை தவிர மற்ற மூன்று இடங்கள் எவை என்பது தெரியவில்லை,'' என்றார்.