📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 26, 2026 05:04 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.15,030க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.275க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.15,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.265க்கு விற்பனையாகிறது.