சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன..?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்.16) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் (செப்.15) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,320க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,040க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (செப்.16) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,065க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.