📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 09, 2026 08:03 PM

சிங்கப்பூர் F1 பந்தயம் தொடங்கியது: சீறிப்பாய்ந்த கார்கள்

சிங்கப்பூர் F1 பந்தயம் தொடங்கியது: சீறிப்பாய்ந்த கார்கள்

ஃபார்முலா ஒன் (F1) கார்ப் பந்தயத் தொடரில் கடினமான பந்தயமாக விளங்கும் சிங்கப்பூர் இரவு நேரப் பந்தயம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) ஆரவாரமாகத் தொடங்கியது.

பந்தயத்தின்போது வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுநர்கள் குளிர்ந்த ஆடையை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை நடந்த பயிற்சி ஓட்டத்தில் 11 அணிகளும் தங்களது கார்களைச் சிங்கப்பூர் பந்தயச் சாலையில் ஓட்டிப்பார்த்தன.

புகைமூட்டத்துக்கு இடையில் 22 வீரர்களும் பந்தயத் திடலில் தங்களது கார்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைச் சோதித்தனர்.

இரவு நேரப் பந்தயம் சவாலாக இருக்கும் என்பதால் பயிற்சி ஓட்டத்தில் ஓட்டுநர்கள் கவனமாகச் செயல்பட்டனர்.

பயிற்சி ஓட்டத்தில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல் முதலிடத்தில் வந்தார். அவர் பந்தயத் திடலின் ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 1:32.2.

இரண்டாவது இடத்தில் ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர்க் வந்தார். மெக்லேரனின் லேண்டோ நாரிஸ் மூன்றாவது இடத்தில் முடித்தார்.

குறும்பந்தயம்

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

முதலிடத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வந்தார்.

இரண்டாவது இடத்தில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல் வந்தார். மூன்றாம் இடத்தை ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லர்க் பிடித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் ஹேமில்டன் ஆறாவது இடத்தில் முடித்தார்.

குறும்பந்தயத்திற்கான தகுதிச்சுற்றில் முதலிடம் பிடிப்பவருக்கு 8 புள்ளிகள் கிடைக்கும்.