📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 04, 2026 02:03 AM

சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; விமானி சாதுர்யத்தால் தப்பிய பயணியர் 322 பேர்

சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; விமானி சாதுர்யத்தால் தப்பிய பயணியர் 322 பேர்

சென்னை: சிங்கப்பூர் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், 322 பயணியர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் நள்ளிரவு 12:00 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது. நேற்று இரவு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இந்த விமானம் தயாரானது.

இதில், பயணியர், விமான குழுவினர் என, 322 பேர் இருந்தனர். விமானம் ரன்வேயில் ஒடத் தொடங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானிக்கு எச்சரிக்கை அலாரம் அடித்தது.

இதை கண்டுபிடித்த விமானி, உடனே விமான இயக்கத்தை நிறுத்தினார். விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரன்வேயில் நின்ற விமானம், இழுவை வண்டி வாயிலாக, 'பே' எனும் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விமானம் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தின் உள்ளே கோளாறு சரி செய்யும் முயற்சியில் இறங்கினர். உள்ளே இருந்த பயணியர் 'லவுஞ்ச்' பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று அதிகாலை 5:00 மணி ஆகியும் விமான பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விதிமுறைகளின்படி பயணியர் அருகில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.