📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 03, 2026 08:00 PM

மின்சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் கைப்பேசி செயலிக்கு அங்கீகாரம்

மின்சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் கைப்பேசி செயலிக்கு அங்கீகாரம்

மின்சிகரெட் பழக்கத்திலிருந்து இளையர்கள் விடுபட உதவும் ஒரு கைப்பேசிச் செயலிக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சனிக்கிழமை (அக்டோபர் 3) அன்று ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ நடந்த சமூக மேம்பாட்டு மன்றத்தின் சட்ட விழிப்புணர்வு வாரங்கள் 2026 (சட்டம்@சிடிசி) நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.

சமூகத்தில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக நாடு தழுவிய முயற்சியாக சட்டம்@சிடிசி தொடங்கப்பட்டது.

அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த இயக்கம், அண்டை வீட்டாருக்கு இடையிலான தகராறு, திருமணம், விவாகரத்து, பண மோசடிகள் போன்ற பிரச்சினைகள்குறித்த விழிப்புணர்வை சிங்கப்பூர் முழுவதும் உள்ள சமூக மன்றங்கள், அமைப்புகள் வழியாகக் கொண்டு செல்லப்படும்.

2025ஆம் ஆண்டில் தெம்பனிசில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு மின்சிகரெட் பழக்கத்திற்காக சுகாதார அறிவியல் ஆணையத்தால் அபராதம் விதிக்கப்பட்ட தனது இரண்டாம் வகுப்பு மகனுடன் ஒரு தந்தை வந்திருந்தார். அந்த அபராதத்தை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்ய அங்கிருந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் 21 வயது சட்ட மாணவியான ஜோய் லியவ் உதவினார்.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அவர், மின்சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் ஒரு செயலியை உருவாக்க விரும்பினார்.

“இவ்வளவு இளம் வயதிலேயே சிறுவர்களிடம் மின்சிகரெட் பழக்கம் ஊடுருவியது உண்மையிலேயே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,” என்றார் ஜோய் லியவ்.

தந்தையின் கோரிக்கை நிறைவேறியதா என்பது தெரியவில்லை. ஆனால் இளையர்களை இந்தத் தீய பழக்கத்திலிருந்து விடுபட உதவுவது முக்கியம் என்று அவர் கருதினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

லியவும் அவரது சக சட்ட மாணவி ஆம்பர் டிங்,21, கணினி அறிவியல் மாணவர் ஆன்சன் கோ, 23, தகவல் அமைப்புகள் மாணவர் லீ யி தெர்ங், 24 ஆகியோர் இணைந்து இளையர்களுக்காக ‘கிளியர்ஏர்’ என்ற செயலியை உருவாக்கினர்.

நிகழ்ச்சியில் $5,000 பரிசுத் தொகையை வென்ற ஐந்து குழுக்களில் இவர்களது குழுவும் ஒன்று.

இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்ட அமைச்சர் எட்வின் டோங், நீண்டகாலப் பிரச்சினைக்கு இளையர்கள் புதிய தீர்வுகள் வழங்கியதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

“இது, மக்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும், இதைச் சொல்வது எளிது, ஆனால் செயல்படுத்துவது மிகவும் கடினம்,” என்று தனது எண்ணத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.