சிறையில் இருக்கும் ரவுடியுடன் வீடியோ காலில் பேசியபடி ஆடைகளை கழற்றிய இன்ஸ்பெக்டர்!
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. அதில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் போனில் பேசிக்கொண்டே தனது ஆடைகளை கழற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களிடமும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
பெண் இன்ஸ்பெக்டர்
புகார் விசாரணை
இதையடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகள் பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீடியோவில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் அளித்து விட்டு தற்போது விடுமுறையில் சென்று விட்டார். இந்த வீடியோ கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரவுடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் இன்ஸ்பெக்டரின் நண்பரான சாய்குமார் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியை சேர்ந்தவர்.
சிறை தொடர்பு அம்பலம்
இந்த வீடியோ எடுத்த காலக்கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியில் இருந்தார். அந்த சிறையில் தான் சாய்குமாரும் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவர்சிறையில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ரவுடி தொடர்பு கொண்டு ஆபாசமான அழைப்புகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாய்குமார் அந்த அழைப்பை பதிவு செய்து கொண்டு அதை சமீபத்தில் கசிய விட்டுள்ளார்.
ரவுடியின் லஞ்ச புகார்
சிறையில் நடக்கும் முறை கேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அந்த பதிவை தொடர்ந்து சிறை அதிகாரிகள் பெலகாவி சிஇஎன் போலீசில் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸ் வீடியோ வேகமாக பரவி வருவதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.