சட்டமன்றத்தை சிறப்பாக நடத்துகிறார் ஜே.சி.டி பிரபாகர்..! மு.க.ஸ்டாலின் பாராட்டியதை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களை
நட்பின் நிமித்தமாய்
நலம்கேட்கச் சென்றேன்;
பொன்னாடை அணிவித்தேன்
ஞானபீடத்தின் பெருமையறிந்து
வீட்டுக்கே வந்து வாழ்த்திய
அந்நாள் முதலமைச்சர்,
பெற்றுவந்த விருதுக்காக
பொன்னாடை அணிவித்தார்
பொன்னாடைக்குப்
“எதைக் கொடுக்கிறாயோ
அதையே பெறுவாய்”
என்ற முதுமொழி
என் மூளைக்குள் ஓடியது
ஒருவரை ஒருவர்
கொண்டாடிக் கொண்டோம்
சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை
முக்கால் மணிநேரம்
இருவரும் கண்டுகொண்டிருந்தோம்
"ஜே.சி.டி பிரபாகர்
சிறப்பாக நடத்துகிறார்
சட்டமன்றத்தை" என்றார்
தி.மு.க தலைவர்
"சட்டமன்றத்தின்
ஆட்ட நாயகன்" என்று
சமூக ஊடகங்கள்
சபாநாயகரைப் பேசுகின்றன
"அப்படியா" என்றார்
ஓர் அழகான காஃபி
குடித்து முடித்து
வாழ்த்தி விடைகொண்டேன்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.