📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 29, 2026 01:01 PM

சூரியோட மண்டாடி 1000 கோடி வசூல் செய்யும்.. அதுக்கு இதை செய்யணும்.. சத்யராஜ் பேச்சு!

சூரியோட மண்டாடி 1000 கோடி வசூல் செய்யும்.. அதுக்கு இதை செய்யணும்.. சத்யராஜ் பேச்சு!

சென்னை: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், சத்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி உள்ள மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், சத்யராஜ், ஆர்ஜே பாலாஜி என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்று சூரி நடித்த மண்டாடி படத்தின் சிறப்புகளை கூறினர்.

அதிலும், குறிப்பாக படத்தில் ஆள் அடையாளமே தெரியாத வகையில் சத்யராஜ் புதிய கெட்டப்பில் நடித்துள்ள நிலையில், மண்டாடி திரைப்படம் 1000 கோடி வசூல் பெறும் என்றும் படக்குழு இந்த விஷயத்தை செய்தாலே போதும் என்று பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

செப்டம்பர் மாதம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து மற்றும் புதிய படங்கள் வெளியாகாது என்கிற தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி மண்டாடி திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

மண்டாடி இசை வெளியீட்டு விழா: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் ரொம்பவே பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அதுவும் கடலில் நடக்கும் பாய்மர படகுகளை வைத்து நடக்கும் வித்தியாசமான போட்டியை மையமாக கொண்டு இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குநர் உருவாக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று நந்தனம் டிரேட் சென்டரில் மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழா ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.

வித்தியாசமான கெட்டப்பில் சத்யராஜ்: 100வது நாள், பாகுபலி கட்டப்பா என நடிகர் சத்யராஜ் ஏகப்பட்ட படங்களில் ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு நடித்து விட்டார். ஆனால், மண்டாடி படத்தில் அவரையே ஆச்சர்யப்படுத்தும் விதமாக மதிமாறன் அவருக்கு புதிய தோற்றத்தை கொடுத்தது ரொம்பவே ஹேப்பியாக இருந்ததாக பேசிய சத்யராஜ் மண்டாடி படம் 1000 கோடி வசூல் செய்யவும் ஒரு சூப்பர் பிளானை மேடையில் பேசி அனைவரது கவனத்தையும் திருப்பினார்.

மண்டாடி 1000 கோடி வசூல் அடிக்க இதை செய்யணும்: இந்தியாவில் அமீர்கானின் தங்கல் படமெல்லாம் 2000 கோடி வசூல் செய்ய முக்கிய காரணமே அந்த படம் சீனாவில் வெளியானது தான். சிவகார்த்திகேயனின் கனா படம் கூட சீனாவில் வெளியானது. ஆனால், மண்டாடி படம் முழுக்க முழுக்க உலகளவில் யாருமே பண்ணாத படம். கண்டிப்பாக இந்த படத்தை சீன மொழியிலும் டப் செய்து அங்கேயும் வெளியிட்டால், கண்டிப்பாக 1000 கோடி வசூலை ஈட்டும் என சத்யராஜ் ஐடியா கொடுத்துள்ளார்.