மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி.. என்னைப் புடிக்காதவங்க பண்ண மோசமான வேலை என செஃப் தாமு உருக்கம்
சென்னை: பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற செமி ஃபைனல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.
அதனை தொடர்ந்து செஃப் தாமுவுக்கு உடல்நலக்குறைவு என்றும் அவர் உயிரிழந்து விட்டார் என்றும் மோசமான வதந்திகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்ப ஆரம்பித்தனர்.
இந்நிலையில், தன்னைப் பற்றிய மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செஃப் தாமு வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாகவும் தன்னை பிடிக்காதவர்கள் பார்த்த மோசமான வேலை தான் அது என்றும் கூறியுள்ளார்.
மரண வதந்தி: ஜாக்கி சான் முதல் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் திடீரென காலமாகி விட்டதாக மரண வதந்திகளை சில யூடியூப் சேனல்கள் திட்டமிட்டு பரப்பி வியூஸ் பெறுவதற்காக மோசடிகளை மனசாட்சியே இல்லாமல் செய்து வருகின்றன. பூனம் பாண்டே உள்ளிட்ட பிரபலங்களே தான் இறந்து விட்டதாக போஸ்ட் போட்டு நாட்டையே உலுக்கிய அதிர்ச்சிகரமான மரண வதந்திகளையும் நாம் பார்த்துள்ளோம்.
செஃப் தாமு உருக்கம்: இந்நிலையில், குக் வித் கோமாளி நடுவரான செஃப் தாமு இறந்து விட்டதாக சிலர் வதந்திகளை பரப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செஃப் தாமு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் நலமுடன் இருக்கிறேன் என்றும் தன்னை பிடிக்காத சிலர், இப்படி வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர். யாரும் அதை நம்ப வேண்டாம், நான் சிக்கிரமே பழையபடி திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார்.
A post shared by Damodaran Kothandaraman (@chef_damu)
உடலில் என்ன பிரச்னை?: இந்த வதந்தி வலம் வர முக்கிய காரணமே செஃப் தாமு அரையிறுதி போட்டிக்கு வராதது தான் என்றும் தனக்கு முட்டியில் பிரச்னை உள்ளது என்றும் அதற்கான ஊசி போட்ட நிலையில் தான் அரை இறுதிக்கு வர முடியவில்லை என்றும் கண்டிப்பாக ஃபைனல்ஸுக்கு வந்து விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பல ஆண்டுகள் நலமுடன் இருப்பீர்கள் ஐயா, உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள், சீக்கிரமாகவே சின்னத்திரையில் உங்களை எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.