📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 12:03 PM

சவுதி அரேபியா: ‘உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்'

சவுதி அரேபியா: ‘உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்'

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

எச்சரிக்கை அறிவிப்புகள்

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரான் ஆதரவுடன் இயங்கி வருகிறார்கள். அவர்கள் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த 10-ந் தேதி, ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், சவுதி அரேபிய அதிகாரிகள் அவசரநிலை கருதி அவ்வப்போது விடுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும்.

ஆபத்து காலங்களில், ஆபத்து நீங்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும். அருகில் உள்ள கட்டிடத்துக்குள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். ஜன்னல்களை விட்டு விலகி உட்புற அறையில் இருக்க வேண்டும். ஆபத்து நீங்கும் வரை வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.

திறந்தவெளி பகுதிகளிலோ, ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி அருகிலோ இருக்கக்கூடாது. பால்கனியிலோ, வீட்டின் மாடியிலோ நிற்கக்கூடாது. வெளியில் இருப்பவர்கள், அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைய வேண்டும். திடமான தடுப்புக்கு பின்னால் இருக்க வேண்டும். கூட்டமான இடங்கள், ஆபத்தான பகுதிகளை தவிர்க்க வேண்டும். தாக்குதல்களை புகைப்படம் எடுக்கக்கூடாது.

வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை அறிவிப்பு வரப்பெற்றால், உடனே சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். பாலங்கள் மற்றும் உயர்ந்த கட்டிடங்களின் அடியில் நிற்கக்கூடாது. மெக்கா, மெதினா, ரியாத், கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 911 என்ற அவசர எண்ணிலும், மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் 998 என்ற அவசர எண்ணிலும் ஆபத்து காலங்களில் அழைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.