📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 14, 2026 12:04 AM

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்?

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்?

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

coimbatore power cut (14-08-2026): கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட்14, 2026, வெள்ளிகிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9. மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்

கோவை மாவட்டம்

கல்லிமடை துணை மின் நிலையம்

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.

சோமயம்பாளையம் துணை மின் நிலையம்

சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி