📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 15, 2026 01:04 AM

வீடு புகுந்து பெண் அடித்து கொலை

வீடு புகுந்து பெண் அடித்து கொலை

வீடு புகுந்து பெண் அடித்து கொலை – கோவையில் மீண்டும் அதிர்ச்சி

வீட்டின் முன்பக்க கதவு சாத்தப்பட்ட நிலையில் இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, சாந்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது தாயின் உடலை பார்த்தபோது முகம், தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பந்தயசாலை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்க்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் மோப்பநாய் ஓடியதுடன், மீண்டும் அங்கு திரும்பியது. இதனால் சாந்தியை கொலை செய்தது யார் என்பது குறித்த துப்பு துலங்கவில்லை. இதையடுத்து சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைபற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். இது குறித்து பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த 58 வயதான பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அடுத்தடுத்து நடைபெறும் கிரைம் சம்பவங்கள் மக்களை வீதி அடைய செய்துள்ளது.