📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 07:03 AM

DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும்

DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும்

DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?

DA Hike Latest News: தீபாவளி நெருக்கும் நிலையில் 3% முதல் 4% வரை உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2026 ஜூலை முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் (DR) உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி, அடுத்த கட்டமாக 3% முதல் 4% வரை உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அகவிலைப்படி எப்படி உயருகிறது?

மத்திய அமைச்சரவை ஒப்புதல் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே எதுவாக இருந்தாலும் உறுதியாக கூறமுடியும். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (DA) உயர்வு எப்படி கணக்கிடப்படுகிறது என்ற சந்தேகம் இருக்கும். அகவிலைப்படி உயர்வை தீர்மானிப்பதில் தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை இந்த குறியீடு அளவிடுகிறது. இதன் அடிப்படையிலேயே விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது.

இதையும் படிங்க: Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!

6 மாத தரவுகள்

ஆகஸ்ட் மாதத்தில் குறியீடு உயர்ந்திருந்தாலும், 2026 ஜூலை முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை தீர்மானிக்க ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத தரவுகளே பயன்படுத்தப்படும். எனவே ஆகஸ்ட் மாதக் குறியீட்டு உயர்வு என்பது அடுத்த கட்ட (ஜனவரி 2027) அகவிலைப்படி கணக்கீட்டிற்குத்தான் பயன்படுமே தவிர, வரவிருக்கும் ஜூலை மாத DA உயர்வை நேரடியாகப் பாதிக்காது என்பதை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்தால் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 என்றால், 3 சதவீத உயர்வால் மாதம் ரூ.540 கூடுதலாகக் கிடைக்கும்.

அதேபோல் 4 சதவீதம் உயர்வாக இருந்தால் கூடுதல் தொகை ரூ.720 ஆகவும், அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 என்றால், 3 சதவீத உயர்வுக்கு ரூ.750 கூடுதலாகவும், 4 சதவீத உயர்வுக்கு ரூ.1,000 கூடுதலாகவும் கிடைக்கும். ரூ.30,000 அடிப்படைச் சம்பளத்திற்கு முறையே ரூ.900 அல்லது ரூ.1,200 கூடுதலாகலாம். மேலும், ரூ.40,000 அடிப்படைச் சம்பளத்திற்கு ரூ.1,200 அல்லது ரூ.1,600 கூடுதலாகவும், ரூ.1 லட்சம் அடிப்படைச் சம்பளத்திற்கு ரூ.3,000 அல்லது ரூ.4,000 கூடுதலாகவும் கிடைக்கும். இவை அகவிலைப்படி சதவீதம் மாறுவதால் ஏற்படும் கணக்கீடுகள் மட்டுமே.

2026 ஜூலை முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, நிலுவைத் தொகையும் (DA Arrears) சேர்த்து ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.உதாரணமாக, மத்திய அமைச்சரவை அக்டோபர் மாதத்தில் இந்த உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கான அகவிலைப்படி வேறுபாட்டுத் தொகை கணக்கிட்டு வழங்கப்படும்.அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் இதே விதிகளின்படி அகவிலைப்படி நிவாரண நிலுவைத் தொகை (DR Arrears) கிடைக்கும். அதாவது நிலுவைத் தொகை எவ்வாறு கணக்கிடப்படும், சம்பளத்துடன் சேர்த்துக் கொடுக்கப்படுமா என்பது அதிகாரப்பூர்வ உத்தரவில்தான் தெளிவாகும்.

மொத்தத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 2026 ஜூலை அகவிலைப்படி உயர்வு குறித்து 3 முதல் 4 சதவீதம் வரையிலான எதிர்பார்ப்புகள் வெளியாகியுள்ளன.உயர்வு 3 சதவீதமாக இருந்தால் தற்போதைய 60 சதவீத அகவிலைப்படி 63 சதவீதமாகவும், 4 சதவீதமாக இருந்தால் 64 சதவீதமாகவும் மாறலாம். இதனால் அடிப்படைச் சம்பளத்தைப் பொறுத்து மாதந்தோறும் கிடைக்கும் தொகையிலும் வேறுபாடு இருக்கும். மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி