📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 23, 2026 12:04 AM

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள..."

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள..."

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள..." - டி.ஜி. ப்ளாகிற்கு திருமணம்; சின்னத்திரையினர் வாழ்த்து!

நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களும், பங்கேற்பாளர்களும் பேசுவதற்கேற்ப சரியான டைமிங் பஞ்ச் போடுவது இவருடைய பலம்.

விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இசைக்கலைஞரான டி.ஜே. பிளாக்கிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. டி.ஜே. பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார்.

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் டி.ஜே-வாக முக்கியப் பங்காற்றி வருகிறார். இதனைத் தாண்டி இசையமைப்பாளர்கள் பலரின் மியூசிக் கான்சர்ட்களில் இவர் பங்காற்றியிருக்கிறார்.

இன்று சின்னத்திரையில் அதிகம் ரசிக்கப்படும் ஒருவராகவும் இவர் மாறியிருக்கிறார். இவருக்குத் திருமணம் நடைபெறவிருப்பதாக, இவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இவர் அறிவித்திருக்கிறார். ரம்யா என்பவருடன் வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி இவருக்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது.

திருமணம் குறித்த அறிவிப்புப் பதிவில் அவர், "என்றென்றும் பற்றிக்கொள்ள... எனக்கு மிகவும் பிடித்தமான மனிதருடன் எனது வாழ்வின் மிகச்சிறந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். இன்னும் 10 நாட்களில்..." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

A post shared by Sudhan Kumar (@djblackchennai)

இவருடைய சின்னத்திரை நண்பர்கள் பலரும், இவருடைய திருமணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.