Tamil Nadu
August 23, 2026 04:03 AM
நீட் தேர்வை ரத்து செய்ய திக சார்பில் டூவீலர் பேரணி
நீட் தேர்வை ரத்து செய்ய திக சார்பில் டூவீலர் பேரணி
திருமங்கலம்: தமிழகத்தில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், இடபிள்யூஎஸ் என்ற 10 சதவீத இடஒதுக்கீட்டை கண்டித்தும் திராவிட கழகம் சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் - தென்காசி டூவீலர் பேரணியை திக இளைஞரணியினர் மேற்கொண்டனர். இதன் துவக்கவிழா நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே நடைபெற்றது.
பேரணியை திக தலைவர் வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம், கி.வீரமணி கூறுகையில், ஒன்றிய பாஜ அரசு நாள்தோறும் ரூ.2,500 சம்பாதிப்போரை உயர் ஜாதி ஏழைகள் என முத்திரை குத்தி, அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் சமூக அநீதியை அரங்கேற்றி வருகிறது. இதனை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை துவக்கியுள்ளோம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu