என் அரசியல் ஆசான் திருமாவளவன்: உதயநிதி
சென்னை: ''என் அரசியல் ஆசான் திருமாவளவன்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி புகழ்ந்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அமைச்சர் வன்னி அரசு: சட்டசபை தேர்தலில், திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற உழைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க.,வினருக்கு நன்றி.
திண்டிவனத்தில் பிரசாரம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, 'எனது வெற்றியை விட, வன்னி அரசு வெற்றி பெறுவது முக்கியம்' என்றார்; அவருக்கும் நன்றி. தி.மு.க.,வினருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். ஆனால், வெற்றி பெற்ற தி.மு.க.,வினர், வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிப்பதில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும், வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கும் இடையிலான கூட்டணி தேர்தலுக்கு மட்டுமல்ல; கொள்கை கூட்டணி. என் அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன் என, பலமுறை பெருமையாக சொல்லியிருக்கிறேன். அவருக்கு என்றும் என் நன்றி.
இவ்வாறு விவாதம் நடந்தது.