📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 03:03 PM

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… அமைதி காத்த இபிஎஸ்; ஆத்திரத்துடன் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்!

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… அமைதி காத்த இபிஎஸ்; ஆத்திரத்துடன் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்!

சென்னை: சட்டசபையில் திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்ட போதும் அமைதி காத்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்க்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்ட போது அமைதி காத்து, நடப்பவைகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் முதல்வர் இபிஎஸ்க்கு அவையில் சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.

அதேபோல், த.வெ.க.வினர் நீங்களும் அமைதி காத்தீர்கள்.. இது தான் உங்கள் தலைவர் உங்களுக்கு கற்று கொடுத்த நல்ல பண்பு என்று கருதி பாராட்டுகிறேன் என சபாநாயகர் கூறினார்.

அவை மாண்பை குறைப்பதா?

மேலும் சபாநாயகர் பிரபாகர் கூறியதாவது: உங்கள் கட்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சியை வழங்கி உள்ளது என்பதை பார்க்கிறேன்; சட்டசபையின் மாண்பை குறைக்கின்ற பணியில் எப்படி எல்லாம் ஈடுபட வேண்டும் என பயிற்சியை பெற்றுக்கொண்டு திமுக எம்எல்ஏக்கள் வந்துள்ளீர்கள்.

எனக்கு லோ பிரஷர் என்னை ஓய்வெடுக்க டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அதையும் மீறி முதல்வர் உரையின் போது நாம் இருக்க வேண்டுமே என்று வந்தேன். நல்ல வேலை முதல்வர் நடந்து கொண்ட முறை மருத்துவர் இல்லாமலேயே எனக்கு சிகிச்சை கிடைத்தது. பிரஷர் ஏறி விட்டது, என்றார்.