எப்.சி.ஆர்.ஏ., சட்ட திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகள்!
வாஷிங்டன்: ''எப்.சி.ஆர்.ஏ.,சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசின் திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகளை உறுதி செய்கிறது'' என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பப்படும் பணத்தை, இந்தியத் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் எவ்வாறு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதை எப்.சி.ஆர்.ஏ., சட்டம் நிர்வகிக்கிறது. இந்த சட்டத்தை கடுமையாக்கும் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதை தடுக்கும் நோக்கத்துடன் தான், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லியை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றன. இந்நிலையில், எப்.சி.ஆர்.ஏ.,சட்டத்தை கடுமையாக்கும் திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை உள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டு நிதிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவது என்பது தேசியப் பாதுகாப்பு நலன் சார்ந்த மிக முக்கியமான நடவடிக்கையாகும். இது உலகம் முழுவதும் உள்ள பல ஜனநாயக நாடுகளில் நவீன நிர்வாகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.
இந்தியாவில் முதல் எப்.சி.ஆர்.ஏ., சட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. 2010ல் அது மிகவும் நவீனமான கட்டமைப்பைக் கொண்ட சட்டமாக மாற்றப்பட்டது; பின்னர் 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் அது மேலும் வலுப்படுத்தப்பட்டது.
அடுத்தகட்ட நடவடிக்கை
குறையவில்லை
இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) உள்ளன. 14,450 நிறுவனங்கள் மட்டுமே எப்.சி.ஆர்.ஏ., பதிவைக் கொண்டுள்ளன. பெரும்பான்மையானவை இச்சட்டத்தின் வரம்பிற்குள் வருவதில்லை.
தடுப்பதில்லை
ஒப்படைக்கப்படும்
தகுதி உண்டு