📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 10, 2026 08:31 AM

எஸ்பிஐ வங்கியில் வேலை... 1,538 காலிப்பணியிடங்கள்

எஸ்பிஐ வங்கியில் வேலை... 1,538 காலிப்பணியிடங்கள்

ETV Bharat / education-and-career

எஸ்பிஐ வங்கியில் வேலை... 1,538 காலிப்பணியிடங்கள்- தமிழ் தெரிந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Published : August 10, 2026 at 8:00 AM IST

புது டெல்லி: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இளநிலை உதவியாளர் பதவியில் உள்ள 1,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் எனப்படும் இளநிலை உதவியாளர் பதவியில் காலியாக உள்ள 1,538 பணியிடங்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 65 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த ஆட்சேர்ப்பு மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி வகுப்பை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

இந்த ஆட்சேர்ப்பு மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி வகுப்பை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் கீழ் நிரப்பப்படுகிறது. இதனால், அந்தந்த மாநிலங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அந்த மாநிலத்தில் மொழியை தெரிந்திருப்பது கட்டாயமாகும்.

அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எஸ்பிஐ கிளர்க் பதவிக்கான தகுதிகள் என்னென்ன?

எஸ்பிஐ வங்கியில் உள்ள கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியின்படி, 20 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது. அதே போன்று 28 வயதை கடந்திருக்க கூடாது. உதாரணத்திற்கு விண்ணப்பதார்கள் 02.04.1998 முன்னரும், 01.04.2006 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.

இதில் ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தளர்வு உள்ளது. அதன்படி, இது அவர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு என்பதால் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதியாக 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதே போன்று, தற்போது இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மூன்று கட்டத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை, முதன்மை மற்றும் மொழி தேர்வு என நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு ஆங்கிலம், நுண்ணறிவு, காரணம் அறிதல் ஆகியவற்றில் இருந்து 100 கேள்விகள் என 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கொள்குறி வகையில் 1 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் நெகட்டிங் மதிப்பெண் உள்ளது.

இதில் தகுதிப் பெறும் நபர்களுக்கு முதன்மைத் தேர்வு 190 கேள்விகள் கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இத்தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெறும். இதில் தேர்ச்சி அடையும் நபர்களுக்கு மொழி தகுதித் தேர்வு நடத்தப்படும். மொழி தகுதித் தேர்வு என்பது தகுதித் தேர்வு மட்டுமே. அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இருப்பினும் மதிப்பெண்கள் இறுதி பட்டியலில் சேர்க்கப்படாது.

10 அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த மூன்று கட்டங்களை கடந்த பின்னர், மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் பணி நியமனம் உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதார்களுக்கு தமிழில் தேர்வு செய்த அனுமதி அளிக்கப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு?

இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.24,050 முதல் அதிகபடியாக ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். அதன்படி, தோராயமாக ஒரு மாதத்திற்கு ரூ.46,000 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்பிஐ வங்கி கிளர்க் பதவியில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள பட்டதாரிகள் https://sbi.bank.in/web/careers/current-openings இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ஒபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

முக்கிய நாட்கள்

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். அட்மிட் கார்டு தேர்வுக்கு முன்பு வெளியாகும். வங்கி வேலைக்கு தயாராகி வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்கள் எஸ்சி இடஒதுக்கீட்டில் கீழ் மட்டும் நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.