Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
Ford Motor Company : ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், ஃபோர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் தொடரும் முதலீடு
தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மூலம் தமிழகத்தில் பல இடங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஃபோர்டு நிறுவனத்தோடு முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஃபோர்டு நிறுவனம்- முதலமைச்சர் ஆலோசனை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் Mathew Godleweski தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் ஃபோர்டு நிறுவனம்
ஃபோர்டு நிறுவனம், சென்னையில், ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில்தான், இந்நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி. தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், 3250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது. இச்சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை முதலமைச்சர் விஜய் நினைவுகூர்ந்தார்.
மேலும் விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்கள். மேலும், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், ஃபோர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி