📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 11, 2026 10:32 AM

Gold rate today : ஒரே நாளில் சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்தது.! வெள்ளி விலையும் சரிந்தது

Gold rate today : ஒரே நாளில் சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்தது.! வெள்ளி விலையும் சரிந்தது

Gold rate today : ஒரே நாளில் சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்தது.! வெள்ளி விலையும் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ...

Gold rate today : தங்கத்தின் விலையானது தினந்தோறும் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

போட்டி போட்டு தங்கம் வாங்கும் மக்கள்

தங்கத்தின் மீதான மதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது. இதனையடுத்து ஒரு சவரன் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சத்தை எட்டிவிடும் என பொருளாதார ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக அனைத்தும் தலைகீழாக மாறியது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியதால், முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக வெள்ளியில் தங்களது முதலீட்டை அதிகரித்தனர். இதனால் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக குறைய தொடங்கியது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 14,015 ரூபாய்க்கும், சவரனுக்கு 1920 ரூபாய் சரிந்து 1,12,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி