Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று காலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்திருந்த நிலையில், மாலையில் அதிரடியாக உயர்ந்து அதிரவைத்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர காரணம் என்ன.?
தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படும். அந்த வகையில் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டிய நிலையில், அடுத்த சில மாதங்களில் 2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகளால் கணிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக குறைந்து. இதற்கு முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டாளர்கள் பார்வையானது திரும்பியது. இதனால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.
இந்த நிலையில் போர் பதற்றம் சற்று ஓய்ந்திருப்பதால் ஹார்மூஸ் வழித்தடத்திலும் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய் விநியோகம் சீரடைந்துள்ளது. இதனையடுத்து தங்ககத்தின் மீது மீண்டும் முதலீட்டாளர்களின் பார்வை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தை டன் கணக்கில் முதலீட்டாளர்கள் வாங்கி வருவதால் தங்கத்தின் விலையானது தற்போது உயர தொடங்கியுள்ளது.
தொடரும் தங்கம் விலை உயர்வு
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்த நிலையில், மாலையில் அதிரடியாக தங்கத்தின் விலையானது உயர்ந்து தலை சுற்றவைத்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி