📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 10:03 AM

“ஹர்திக் பாண்டியா எங்க டீமுக்கு வரப் போகிறார்”.. வருணை வம்பிழுத்ததால் உற்சாகத்தில் KKR ரசிகர்கள்

“ஹர்திக் பாண்டியா எங்க டீமுக்கு வரப் போகிறார்”.. வருணை வம்பிழுத்ததால் உற்சாகத்தில் KKR ரசிகர்கள்

“ஹர்திக் பாண்டியா எங்க டீமுக்கு வரப் போகிறார்”.. வருணை வம்பிழுத்ததால் உற்சாகத்தில் KKR ரசிகர்கள்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறக்கூடும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கொல்கத்தா அணி வெளியிட்ட ஒரு சிறிய வீடியோ பதிவு இந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தது. அதில், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குப் பின்னால் வரும் ஹர்திக் பாண்டியா, வருணை செல்லமாக வம்பு இழுத்துவிட்டுச் செல்கிறார். இந்த வீடியோவைக் கண்ட கொல்கத்தா ரசிகர்கள், ஹர்திக் பாண்டியா தங்கள் அணிக்கு வரப்போகிறார் என்பதற்கான மறைமுக அறிகுறி இது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அஜிங்க்யா ரஹானே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் தேவைப்படுகிறார். இதனால் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க அந்த அணி நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடந்த 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்தது.

ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் இந்த பந்தயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அக்சர் படேல், ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் ஆகியோருக்கு மாற்றாக ஹர்திக் பாண்டியா வர்த்தகம் செய்யப்படலாம் என்றும் வதந்திகள் உலா வருகின்றன.

இதற்கு இடையில், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், ஒருவேளை ஹர்திக் பாண்டியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கொடுத்தால், அதற்குப் பதிலாக கொல்கத்தா அணியில் இருந்து ஹர்ஷித் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை மும்பை அணி வாங்க நினைக்கும் என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.