📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 29, 2026 04:03 AM

இளைஞரை கன்னத்தில் அறைந்த அமைச்சர்... நடவடிக்கை எடுக்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!

இளைஞரை கன்னத்தில் அறைந்த அமைச்சர்... நடவடிக்கை எடுக்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!

புதுடெல்லி,

இளைஞரின் கன்னத்தில் அறைந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஆய்வு

டெல்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, திலக் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலையின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காகச் சென்றார். அப்போது அங்கு வந்த ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள், புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக கூறி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதனை அங்கிருந்த சாஹிப் சிங் என்ற இளைஞர் கேள்வி எழுப்பி வீடியோவாக பதிவு செய்து வந்தார்.

கன்னத்தில் பளார்

இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து மாநில அமைச்சர் பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். திலக் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் சௌரப் பரத்வாஜ் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சௌரப் பரத்வாஜ் மற்றும் கட்சித் தொண்டர்களை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து போராட்டக் குழுவினரை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.