📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 02, 2026 06:32 PM

இலங்கைச் சிறைக் கலவரம்: ஒருவர் மரணம், ஆறு பேர் காயம்

இலங்கைச் சிறைக் கலவரம்: ஒருவர் மரணம், ஆறு பேர் காயம்

கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள சிறைச்சாலை ஒன்றில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மஹார சிறைச்சாலையில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தக் கூடுதல் காவல்துறைப் படைகள் அனுப்பப்பட்டன.

சிறைச்சாலையின் வெளிப்பகுதியைப் பாதுகாக்கச் சிறப்பு அதிரடிப் படையின் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும், சிறைச்சாலையின் உட்பகுதியில் அவர்கள் களமிறக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

இந்த வன்முறைச் சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரப் புலனாய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கையின் மற்றொரு சிறையில் கலவரம் வெடித்தது. அதில் 31 பேர் மாண்டனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கைதிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்களும் அசம்பாவிதங்களும் ஏற்பட்டு வருகின்றன.