📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 12, 2026 10:03 PM

IND vs SL: கம்பீரை ஏமாற்றிய இலங்கை கிரிக்கெட்.. பிட்ச்சில் மோசடி? மூடிய திரையில் நடந்தது என்ன?

IND vs SL: கம்பீரை ஏமாற்றிய இலங்கை கிரிக்கெட்.. பிட்ச்சில் மோசடி? மூடிய திரையில் நடந்தது என்ன?

IND vs SL: கம்பீரை ஏமாற்றிய இலங்கை கிரிக்கெட்.. பிட்ச்சில் மோசடி? மூடிய திரையில் நடந்தது என்ன?

காலே: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இலங்கை அணி மூடிய திரைக்கு பின்னால் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சிப் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க காலே கோட்டையிலிருந்து இந்த பயிற்சிகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

பயிற்சிக்கு நடுவே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் ஆகியோர் திடீரென அங்கு வருகை தந்து பிட்ச்சை பார்வையிட்டது, உள்ளூர் அணியினருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்கள் இருவருக்காகவும் பிட்ச் மீது போடப்பட்டு இருந்த பாய் சிறிது நேரம் அகற்றப்பட்டு, அவர்கள் கிளம்பியவுடன் உடனடியாக மீண்டும் மூடப்பட்டது.

ஆடுகளத்திற்கு அருகில் உள்ள பயிற்சி வலைகளில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட, மைதான பராமரிப்பாளர்கள் ஆடுகளத்திற்கான இறுதிப் பணிகளை மேற்கொண்டனர்.கம்பீர் மற்றும் கோடக் அங்கிருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள், ஆடுகளத்தின் புல் வெட்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. தீவிர கண்காணிப்புக்கு மத்தியில், மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை பலமுறை சரிபார்த்தனர். பின்னர் பிட்ச் ரோலர் கொண்டு ஆடுகளம் சமன்படுத்தப்பட்டது. சிறிது நேரம் வெயிலில் காய வைக்கப்பட்ட ஆடுகளம், பின்னர் மீண்டும் மூடப்பட்டது.

டெஸ்ட் போட்டி துவங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைக் களமிறக்குவது குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டியின் முதல் நாள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே பந்துவீச்சு கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று இந்திய நிர்வாகம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.

எனவே, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று உறுதியாகத் தெரியாத பட்சத்தில், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் விளையாடுவதைக் காண முடியும்.கூடுதல் வேகப்பந்து வீச்சாளரா அல்லது சுழற்பந்து வீச்சாளரா என்ற முக்கியமான முடிவு தான் போட்டியின் போக்கைத் தீர்மானிக்கப் போகிறது. வாஷிங்டன் சுந்தர் அல்லது வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி போன்ற வீரர்கள் தற்போதைய அணியில் இல்லாததால், சிறப்பு பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறிழைக்க இந்திய அணி விரும்பாது.

காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், கேப்டன் சுப்மன் கில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு குல்தீப் யாதவ் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியமாகிறது. போட்டிக்கான திட்டத்தில் சரண்ஷ் ஜெயின் பெயரும் பரிசீலனையில் இருக்கக்கூடும்.

ஆட்டத்தின் பிளேயிங் லெவன் ருபுறமிருக்க, வானிலை நிலவரமும் இந்திய அணி நிர்வாகத்திற்கு சவாலாக அமையும் எனத் தெரிகிறது. வீரர்கள் ஹோட்டலில் தங்கியது முதல் அவ்வப்போது குறுகிய ஆனால் பலத்த மழை பெய்து வருகிறது. புதன்கிழமையன்று வெயில் காணப்பட்டாலும், வரும் வாரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.