📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 11, 2026 01:03 AM

IND vs WI: சிவம் துபேவுக்கு டாட்டா பைபை.. உள்ளே வரும் LSG பவுலர்.. இந்திய அணி செய்யப் போகும் மாற்றம்

IND vs WI: சிவம் துபேவுக்கு டாட்டா பைபை.. உள்ளே வரும் LSG பவுலர்.. இந்திய அணி செய்யப் போகும் மாற்றம்

IND vs WI: சிவம் துபேவுக்கு டாட்டா பைபை.. உள்ளே வரும் LSG பவுலர்.. இந்திய அணி செய்யப் போகும் மாற்றம்

இந்தூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 போட்டியில், ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஞ்சியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 249 ரன்கள் குவித்தும் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இதனால் அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் முக்கியமான 3-வது டி20 ஆட்டம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தூர் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு அதீத சாதகமானது என்பதால், பந்துவீச்சு வரிசையை பலப்படுத்த இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக ராஞ்சி போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே ஏமாற்றம் அளித்த சிவம் துபே அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. 4-வது வரிசையில் களமிறங்கிய அவர் 10 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் பந்துவீச்சிலும் 2 ஓவர்களில் 30 ரன்களை வாரி வழங்கினார்.

இதனால் முழுநேர 5-வது பந்துவீச்சாளராக கூடுதல் பலம் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் நடுவரிசையிலும் கடைசி கட்ட ஓவர்களிலும் பந்துவீச்சில் மிரட்டிய இவர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப், ரூதர்போர்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த சிறந்த தேர்வாக இருப்பார்.

பேட்டிங் வரிசையில் 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன் தனது தொடக்க வீரர் இடத்தை உறுதி செய்துவிட்டார். அவருடன் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா ஆகியோர் நடுவரிசையை பலப்படுத்துவார்கள்.

இந்திய உத்தேச ஆடும் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், அக்‌சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், குல்தீப் யாதவ், மயங்க் யாதவ்.