📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 16, 2026 12:03 AM

IND vs WI: இந்திய அணியில் இவர் இருந்திருந்தால், ஆட்டத்தை தனி வீரராக மாற்றியிருப்பார்

IND vs WI: இந்திய அணியில் இவர் இருந்திருந்தால், ஆட்டத்தை தனி வீரராக மாற்றியிருப்பார்

IND vs WI: இந்திய அணியில் இவர் இருந்திருந்தால், ஆட்டத்தை தனி வீரராக மாற்றியிருப்பார்-வசீம் ஜாபர்

மும்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்படாத இளம் பேட்டர் ரிங்கு சிங் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பார் என்று முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு ரிங்கு சிங் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

தனது யூடியூப் சேனலில் பேசிய வசீம் ஜாஃபர், "பேட்டர்களின் கோணத்தில் பார்த்தால், ரிங்கு சிங் மற்றவர்களை விட மிகவும் முன்னிலையில் இருக்கிறார். 5 மற்றும் 6-வது இடங்களில் அவர் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். மேலும் அவர் ஒரு இடதுகை பேட்டர். பந்துவீச முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அவர் இந்திய அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது."

"ரஜத் படிதார் மேல்வரிசையில் பேட்டிங் செய்வதால் அவருக்கு இடம் கிடைப்பது கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் ரிங்கு சிங் அணியில் இருந்திருக்க வேண்டும். ரிங்கு சிங் இந்த போட்டியில் இருந்திருந்தால் முடிவே வேறாக இருந்திருக்கலாம். ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் இருந்து பல போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார்" என்று கூறினார்.

பிஹார் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடிய ரிங்கு சிங் 112 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் உத்தரப் பிரதேசம் இன்னிங்ஸ் மற்றும் 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நான்காவது டி20 போட்டியில் நமன் தீர் வீசிய ஒரு ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டன. இது குறித்து பேசிய ஜாஃபர், இந்திய ஆடுகளங்களில் பந்துவீச்சில் மாறுபாடுகள் இல்லாத ஆஃப்-ஸ்பின்னர்கள் சிரமப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். நமன் தீர் தனது முழுமையான 4 ஓவர்களை வீசுவார் என்று எதிர்பார்ப்பது மிகவும் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.

"ஆஃப்-ஸ்பின்னர்கள் பவர்ப்ளேவுக்குப் பிறகு வீசும்போது அவர்களிடம் வேறுபட்ட உத்திகள் இல்லை என்றால் பந்துவீசுவது கடினம். ரோஸ்டன் சேஸ் அதை சிறப்பாக செய்கிறார். ஆனால் நமன் தீரிடம் அந்த அளவுக்கு மாறுபாடுகள் இல்லை என்பதால், அவர் 4 ஓவர்கள் வீசுவார் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. இருப்பினும், பேட்டராக டி20 கிரிக்கெட்டில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்."

கடந்த இரண்டு போட்டிகளில் சோபிக்காவிட்டாலும், வேகமான 25-30 ரன்களைக் குவிக்கும் திறன் அவருக்கு உள்ளது" எனத் தெரிவித்தார்.இந்த தொடரில் நமன் தீர் இதுவரை 4*, 10, மற்றும் 0 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சில் 4 போட்டிகளில் 11.40 எகானமி ரேட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.