📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 17, 2026 05:03 AM

மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கும் ‘குறிஞ்சி நலம்’ தொண்டு நிறுவனத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கும் ‘குறிஞ்சி நலம்’ தொண்டு நிறுவனத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கும் ‘குறிஞ்சி நலம்’ தொண்டு நிறுவனத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கும் ‘குறிஞ்சி நலம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா.சுப்பிரமணியனின் “குறிஞ்சி நலம்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கி வைத்தார். தொண்டு நிறுவனத்துக்கான லட்சினையை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், துணை அமைப்புச் செயலாளர் ப.தாயகம் கவி, மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன், டாக்டர் சொக்கலிங்கம் மற்றும் சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். ‘குறிஞ்சி நலம்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் குறித்து மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

குறிஞ்சி நலம் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும், இறுதி ஞாயிற்றுக்கிழமையில் தமிழ்நாட்டில் இருக்கிற இரண்டாயிரம் மலைக் கிராமங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு மலையிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஏறத்தாழ 20 மருத்துவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் அங்கே செல்லவிருக்கிறோம்.

அந்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, உயர் சிறப்பு மருத்துவ சேவையை அவர்களுக்கு எடுத்துரைத்து, மருந்து மாத்திரைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய நாள்பட்ட நோய்பாதிப்புகளுக்கு, ஏற்கெனவே திமுக தலைவரால் ரூ.7500 கோடி யுனைடட் இன்சுரன்ஸில் கட்டப்பட்டிருக்கிறது. அந்த காப்பீட்டுத்திட்டத்தில் அந்தத் தொகையைப் பெற்றுத் தருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். முதல் மருத்துவ முகாம் இன்னும் நான்கு நாட்களில் குரங்கனி மலைகிராமத்தில் நடைபெறவிருக்கிறது. தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்., தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.