📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 27, 2026 09:02 AM

இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு

இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு

இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!

India UPI Statistics 2026: யுபிஐ (UPI) பயன்பாடு மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NCPI) வெளியிட்டுள்ள 2026 ஜூன் மாத நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த யுபிஐ சந்தையில் ஃபோன்பே (PhonePe) 46.2% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கூகுள் பே (Google Pay) 32.6% பங்கைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரு செயலிகள் மட்டுமே நாட்டின் 80% யுபிஐ சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், Paytm 7.9%, Navi 3.7%, Super.money 1.9%, BHIM 1.0% மற்றும் FamApp by Trio 0.9% பங்கு வகிக்கின்றன.

ஒரு மாத கணக்கீட்டின்படி இந்தியாவில் மொத்தமாக 2,270 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 28.9 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிமாறப்பட்டுள்ளது. இதில் சராசரியாக ஒரு பரிவர்த்தனையின் மதிப்பு ரூ. 1,273 ஆகும். மக்கள் தினசரி பயன்படுத்தும் இடங்களில் சராசரி தொகையை நோக்கினால், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ரூ. 1,367, பெட்ரோல்/டீசலுக்கு ரூ. 658, மருந்தகங்களில் ரூ. 423, மளிகைப் பொருட்களுக்கு ரூ. 213, உணவகங்களில் ரூ. 173, பேக்கரயில் ரூ. 137, ஃபாஸ்ட் ஃபுட்டிற்கு ரூ. 120 மற்றும் டிஜிட்டல் தங்கத்திற்கு ரூ. 109 வரை செலவழிக்கப்படுகிறது.

இந்தியர்கள் யுபிஐ பணப்பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் டாப் 10 இடங்களில் மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் 373.9 கோடி பரிவர்த்தனைகளுடன் முதலிடத்தில் உள்ளன. இதற்காக மட்டும் மக்கள் செலவழித்த தொகை ரூ. 79,705 கோடியாகும். இதனைத் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் மையங்களில் 144.9 கோடி பரிவர்த்தனைகளும், உணவகங்களில் 124.2 கோடி, தொலைத்தொடர்பு/ரீசார்ஜிற்கு 82.4 கோடி, பெட்ரோல் பங்குகளில் 71.6 கோடி, பெட்டிக்கடைகளில் 41.6 கோடி, பேக்கரிகளில் 39.6 கோடி, மருந்தகங்களில் 29.4 கோடி, பால் கடைகளில் 26.8 கோடி மற்றும் டிஜிட்டல் தங்கம் வாங்குவதில் 23.2 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன.

யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கையில் 3-ல் 2 பங்கு (63.5%) கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கேச் செல்கிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையேயான பரிவர்த்தனை 36.5% ஆக உள்ளது. ஆனால், மொத்த பண மதிப்பில் 70% பரிமாற்றம் தனிநபர்களுக்கு இடையே தான் நடைபெறுகிறது. கடன் அடைப்பது, பங்குச் சந்தை பேமெண்ட், கரண்ட் & வாட்டர் பில், லோன் & EMI போன்ற பெரிய தொகைகளுக்கான பரிவர்த்தனைகள் குறைந்த எண்ணிக்கையிலும், மளிகைப் பொருட்கள், ஃபாஸ்ட் ஃபுட், போக்குவரத்து, காபி & ஸ்நாக்ஸ் போன்ற குறைந்த தொகைக்கான பரிவர்த்தனைகள் அதிக எண்ணிக்கையிலும் நடைபெறுகின்றன.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி