📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 10, 2026 01:04 PM

இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்பிராஸ் கான் சேர்ப்பு | IND vs SL டெஸ்ட் தொடர்

இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்பிராஸ் கான் சேர்ப்பு | IND vs SL டெஸ்ட் தொடர்

சர்பிராஸ் கான்

புதுடெல்லி: இலங்​கை​யுட​னான கிரிக்​கெட் டெஸ்ட் தொடரில் காயம் அடைந்​துள்ள சாய் சுதர்​சனுக்​குப் பதிலாக இந்​திய அணியினருடன் சர்​பி​ராஸ் கான் இணை​ய​வுள்​ளார்.

இலங்​கைக்​கான தொடரில் விளை​யாடும் இந்​திய அணி​யில் சாய் சுதர்​சன் இடம்​பெற்​றிருந்​தார். காயம் காரண​மாக அவர் தொடரிலிருந்து வில​கி​யுள்​ள​தால் தற்​போது சர்​பி​ராஸ் கான் அணியில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார் என்று இந்​திய கிரிக்​கெட் கட்டுப்பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) தெரி​வித்​துள்​ளது.

அவர் விரை​வில் இலங்கை சென்று இந்​திய அணி​யினருடன் இணைந்து கொள்​வார் என்று பிசிசிஐ வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.