Latest News
August 17, 2026 03:31 AM
இரு பதின்ம வயதுப் பெண்களைக் காணவில்லை
பதின்ம வயது மாணவிகள் இருவரைத் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) பிற்பகலிலிருந்து காணவில்லை.
காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது. டாயிங் நுர்’அட்ரியானி முகம்மது ஃபைரூஸ், 13, எல் அம்ரித்தாஞ்சலி, 14, ஆகிய இருவரும் 9 பாசிர் ரிஸ் டிரைவ் 6 அருகே திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் தங்கள் பள்ளிச் சீருடையில் காணப்பட்டனர்.
டாயிங் நுர்’அட்ரியானி கருநீலச் சட்டையும் இளநீலப் பாவாடையும் அணிந்திருந்தார். எல் அம்ரித்தாஞ்சலி வெள்ளைச் சட்டையும் வெளிர்நீலப் பாவாடையும் அணிந்திருந்தார்.
இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியுமா என்பது தெரியவில்லை.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 எனும் தொலைபேசி எண் வழியாகவோ www.police.gov.sg/i-witness இணைய முகவரி வாயிலாகவோ விவரமளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
அனைத்து தகவல்களும் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்.