📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 05:03 AM

இயக்குநர் அருண் குமாரின் புதிய திரைப்படத்தில் இணைந்த கமல்

இயக்குநர் அருண் குமாரின் புதிய திரைப்படத்தில் இணைந்த கமல்

அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் அப்டேட் வெளியிட்டுள்ளது.

2014 ம் ஆண்டு வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்தை இயக்கி எஸ்.யு அருண் குமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இப்படம் பல திரைப்பட விழாக்களில் வெளியாகி மக்களின் மனதை வென்றது. 6 தமிழ்நாடு மாநில அரசு விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு ‘சேதுபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. மீண்டும் 2019ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் ‘சிந்துபாத்’ திரைப்படத்தை இயக்கினார். கடந்த 2023 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமாக ‘வீர தீர சூரன்’ படம் கடந்த மார்ச் 2025ம் ஆண்டு வெளியானது.

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தக் லைப்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து சண்டை கலைஞர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தன் 234-வது படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்படம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

ரஜினிகாந்த்தின் 173-வது படமான ‘தர்மன்’ படத்தை தயாரித்து வரும் கமல்ஹாசன் அந்தப் படம் முடிந்த பிறகு கமலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், அருண் குமார் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கவுள்ளதாக ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் அப்டேட் வெளியிட்டுள்ளது. கையில் வெட்டு கத்தியுடன் கமல் நடப்பது போன்ற புகைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது. கமல் ஹாசன் இப்படத்தில் எப்படி தோன்ற வேண்டும் என்பதற்கான ‘லுக் டெஸ்ட்’ எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தோ வாரேன் 🔥@ikamalhaasan #SUArunkumar#KamalHaasan #Mahendran@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/1GMUOdcSH6