ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: நடிகர் சிவகுமார் புத்தகத்தில் இருக்கும் அந்த 37
போக்சோ வழக்கில் கைதான 'ஜெம்' வீரமணிக்கு, தன் தாயின் சமாதியை இலவசமாக அமைத்து கொடுத்த நட்பின் நன்றி கடனை நடிகர் சிவகுமார் தன் சுயசரிதையில் பதிவிட்டுள்ளார்.
புழல் சிறையில்
கடந்த ஆண்டு அக்டோபரில் பதியப்பட்ட இந்த வழக்கில், நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவுக்குப் பின் விசாரணை தீவிரமடைந்து, வீரமணிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் ரெய்டுகளும், அடுத்தடுத்த கைதுகளும் அரங்கேறி வருகின்றன.
சுயசரிதை புத்தகம்
இந்தசூழலில், சமூக வலைதளங்களில் நடிகர் சிவகுமார் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் 37-வது பக்கம் திடீரென வைரலாகி, விவாதப் பொருளாக மாறியுள்ளது. நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தின் மீதும், குறிப்பாக தனது தாயார் மீதும் கொண்டிருந்த பாசத்தை விவரிக்கும் ஒரு எமோஷனல் பகுதியாகவே அந்த பக்கத்தை எழுதியுள்ளார்.
அதில், சென்னையில் தனது தாயார் மறைந்த போது, அன்றைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, சிவாஜி கணேசன், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சினிமா உலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
நண்பர் ஜெம் வீரமணி
அதனைத் தொடர்ந்து, தனது தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளின் போது நடந்த ஒரு முக்கிய நிகழ்வை நன்றியோடு பதிவு செய்துள்ளார்.
"ஓராண்டு ஓடியதே தெரியவில்லை. முதலாம் ஆண்டு நிறைவுநாள். கண்ணம்மாபேட்டையில் அவருக்கு, நண்பர் ஜெம் கிரானைட் வீரமணி, கருப்பு கிரானைட்டில் இலவசமாக சமாதி கட்டித் தந்தார். " மேலும் அந்த சமாதிகல்லில், "அம்மா! உயிராய் -உடலாய்-உதிரமாய்-என்னுள்ளே நீ இருக்க-பிரிவென்பதேது - சிவகுமார்" என்ற வரிகளைத் தானே செதுக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொடூரமான இருண்ட பக்கம்
அவர் அன்றைய காலகட்டத்தில், உயர்தர தொழிலதிபராகவும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு வட்டத்தைக் கொண்டவராகவும் விளங்கிய வீரமணியின் “நண்பர்" என்ற முகமும், அவரது கொடைத்தன்மையும் மட்டுமே சிவகுமாரின் அந்த சுயசரிதைப் பக்கத்தில் பிரதிபலித்திருந்தது.