📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 30, 2026 01:03 AM

``ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு?"

``ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு?"

``ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு?" - தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக விமர்சனம்!

ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்.எல்.ஏ பேச்சுக்கு அதிமுக விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, த.வெ.க எம்.எல்.ஏ, ``அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களை சீரழிக்கும் இடம். ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு செலவிட்ட ரூ.50 கோடியை மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க பயன்படுத்தியிருக்கலாம்" எனப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?

மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்! (பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.