📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 13, 2026 12:03 PM

“ஜடேஜா இறுதிக் கட்டத்தில் இருக்கிறார் அதனால்..”.. குல்தீப் பற்றி பேசிய முரளி கார்த்திக் கருத்து

“ஜடேஜா இறுதிக் கட்டத்தில் இருக்கிறார் அதனால்..”.. குல்தீப் பற்றி பேசிய முரளி கார்த்திக் கருத்து

“ஜடேஜா இறுதிக் கட்டத்தில் இருக்கிறார் அதனால்..”.. குல்தீப் பற்றி பேசிய முரளி கார்த்திக் கருத்து

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் நிலை குறித்து முன்னாள் வங்கதேசம் வீரர் முரளி கார்த்திக் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசிய முரளி கார்த்திக், "ரவீந்திர ஜடேஜா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறினார். இதனால், டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவுக்குத் தொடர்ந்து விளையாட வாய்ப்பளித்து, அவருக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

"ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வழிநடத்திய காலத்தில், குல்தீப் யாதவுக்குத் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கௌதம் கம்பீர் 2024 ஜூலையில் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, குல்தீப் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்." என்றார் முரளி கார்த்திக்.

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாததை முரளி கார்த்திக் சுட்டிக்காட்டினார். "அந்தத் தொடரின்போது "குல்தீப் எங்கே?" என்று பலரும் கேள்வி எழுப்பியும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாமல் வெளியில் அமர வைக்கப்பட்டார். ஜடேஜாவின் காலம் முடிவடையும் நிலையில், சுழற்பந்து வீச்சுக்கு குல்தீப் தலைமை தாங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது." என்றார்.

குல்தீப்பின் பேட்டிங் திறமை குறித்த விமர்சனங்களை பற்றி பேசிய முரளி கார்த்திக், அவர் பேட்டிங்கில் மோசமானவர் அல்ல என்றும், நைட்வாட்ச்மேனாகக் களம் இறங்கி நீண்ட நேரம் விக்கெட்டைப் பாதுகாக்கக் கூடியவர் என்றும் கூறினார். ஆனாலும், அவரை ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என இழந்ததால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. அதனால் இந்திய அணிக்கு இந்த இலங்கை தொடர் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இதன் பிறகு இந்தியா நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராகவும், ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.