Videos news
August 13, 2026 03:00 PM
காணொளி: ரேஷன் கடையை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை வலம் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை அன்று அதிகாலையில் காட்டு யானை ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசியை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த மூட்டைகளை தூக்கிச் சென்றுள்ளது. யானை ரேஷன் கடையின் கதவை உடைக்கும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
Videos news