📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 13, 2026 10:01 PM

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில்:-

ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை பரிசீலிக்க வேண்டும்.

மேலும் அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்தல்; பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற விவாதங்கள், இதன்மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடரவும்,

மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கு (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடர்வதற்கும்),

மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தை 2.2:1 என்ற நிலையில் பேணுவதற்கும்,

தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும்,

தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை, ’மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்’ நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மேற்கொள்ளப்பட்டால், 1967-தமிழ்நாட்டின் மறுவரையறை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது.

மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்கு பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய மாற்றியமைக்கும் மறுறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக உள்ளது.

தீர்மானத்தில் பின்வருன வலியுறுத்தப்பட்டுள்ளன:

1) மக்களலையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

2) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிவேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும். அதாவது மாநிலங்களுக்கு தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும்.

3) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை றுத்துகிறது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீர்மனைத்தின் நகலை இதனுடன் இணைத்திருக்கிறேன்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை பரிசிலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பிரதமரை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது.