📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 15, 2026 08:03 AM

காதலிக்கு மெசேஜ்.. தமிழக வீரருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.. டிஎன்பிஎல் தொடரில் அதிரடி

காதலிக்கு மெசேஜ்.. தமிழக வீரருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.. டிஎன்பிஎல் தொடரில் அதிரடி

காதலிக்கு மெசேஜ்.. தமிழக வீரருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.. டிஎன்பிஎல் தொடரில் அதிரடி

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியின் போது, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அமரும் டக்-அவுட் பகுதியில் இருந்து தனது காதலிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிய தமிழக கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பிசிசிஐ ஊழல் தடுப்பு விதிமுறைகளின்படி, போட்டிகள் நடைபெறும் போது வீரர்கள் மற்றும் நடுவர்கள் இருக்கும் பகுதியில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்த முழுமையான தடை உள்ளது. ஆனால், இந்த பாதுகாப்பு விதியை மீறி தமிழக வீரர் ஒருவர் போட்டி நேரத்தின் போது தனது காதலிக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு, பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அந்த வீரரின் பெயர் விவரங்களை வெளியிட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுத்துவிட்டது. அவர் கடந்த 2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக விளையாடி 2 அரைசதங்கள் விளாசிய இடதுகை பேட்டர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கடுமையான விதிமீறலுக்காக அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முதலில் ஆலோசித்தது. எனினும் இந்த செயலில் சூதாட்டம் போன்ற தீவிர குற்றங்கள் எதுவும் இல்லாததால், அவருக்கு அபராதத்துடன் கூடிய இறுதி எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விதிகளின்படி போட்டி தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது செல்போன்களை அணைத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். போட்டி தொடர்பான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் ஆய்வாளர் மட்டுமே குறிப்பிட்ட இடத்தில் கணினியைப் பயன்படுத்த அனுமதி உண்டு. முன்னதாக, 2026 ஐபிஎல் தொடரின் போது டக்-அவுட்டில் செல்போன் பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தருக்கும் பிசிசிஐ 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.