📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 01:04 PM

கைது செய்யப்பட்டுள்ள CJP நிர்வாகிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க திமுக தயார்..! மு.க.ஸ்டாலின்

கைது செய்யப்பட்டுள்ள CJP நிர்வாகிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க திமுக தயார்..! மு.க.ஸ்டாலின்

கைது செய்யப்பட்டுள்ள CJP நிர்வாகிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க திமுக தயார்..! மு.க.ஸ்டாலின்

சென்னை: தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தியதற்காக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசால் கைது செய்யப்பட்டுள்ள கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கி உறுதுணையாக இருக்க திமுக தயாராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; "இந்த அரசால் எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்ய முடியும்..? எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜக-வால் ஒடுக்க முடியும்? இந்த அரசு எவ்வளவுக்கவ்வளவு இளைஞர்களைச் சிறையில் அடைக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாத சாதாரண குடிமக்களும் வீதிக்கு வந்து, மக்களுக்கு இருக்கும் உண்மையான சக்தியை அரசுக்கு காட்டுவார்கள்!

இந்த இக்கட்டான சூழலில் கைது செய்யப்பட்டுள்ள CJP நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோருடன் தோளோடு தோள் நிற்கிறோம்! அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டரீதியான உதவிகளையும், ஆதரவையும் வழங்க திமுக தயாராக உள்ளது" என்றும் கூறி உள்ளார்.