📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 16, 2026 02:03 PM

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.. கோலி இல்லை.. இந்திய ஜாம்பவான் சச்சினை புகழ்ந்த அக்தர்

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.. கோலி இல்லை.. இந்திய ஜாம்பவான் சச்சினை புகழ்ந்த அக்தர்

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.. கோலி இல்லை.. இந்திய ஜாம்பவான் சச்சினை புகழ்ந்த அக்தர்

இஸ்லாமாபாத்: இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை 'கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்' என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தேர்வு செய்து பாராட்டி உள்ளார்.

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்ற சோயிப் அக்தர், கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது பேசிய அவர், "சச்சின் டெண்டுல்கர்தான் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் விவியன் ரிச்சர்ட்ஸ் விளையாடியதை நேரில் பார்த்ததில்லை. ஆனால் இம்ரான் கான், வாசிம் அக்ரம் ஆகியோர் விளையாடியதை பார்த்திருக்கிறேன். மார்ட்டின் குரோ, ரிக்கி பாண்டிங் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன்கள் என்றாலும், சச்சின்தான் உலகிலேயே மிகச்சிறந்தவர். அவர் இப்போதும் என்றும் மிகச் சிறந்த வீரர் தான்" என்று அக்தர் புகழ்ந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக பந்துவீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள சோயிப் அக்தர், கடந்த 1997 முதல் 2011 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். இவர் டெஸ்டில் 178 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 10 டெஸ்ட் மற்றும் 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அக்தர், சச்சின் டெண்டுல்கருடன் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.

தற்போது பல முன்னாள் வீரர்களும், விளையாட்டு விமர்சகர்களும் விராட் கோலியை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கொண்டாடி வரும் நிலையில், அக்தரின் இந்த கருத்து கவனம் பெற்றுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள அக்தர், சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமைக்கு என்றும் தான் ஒரு தீவிர ரசிகன் என்று கூறினார்.